ALAM SEKITAR & CUACAECONOMY

சிலாங்கூரில் புக்கிட் அந்தாராபங்சா உள்பட ஐந்து இடங்களில் நிலச்சரிவு அபாயம்

ஷா ஆலம், டிச 19- சிலாங்கூரில் நிலச்சரிவு அபாயம் உள்ள ஐந்து இடங்களை மலேசிய கனிமவள  மற்றும் புவி அறிவியல் துறை பட்டியலிட்டுள்ளது.

புக்கிட் அந்தாராபங்சா, கோல குபு பாரு, ஜாலான் கோலகுபு-ரவுப், சுங்கை பூலோ, கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை ஆகியவையே அந்த ஐந்து இடங்களாகும் என அத்துறை கூறியது.

பெர்லிஸ் தவிர்த்து நாடு முழுவதும் 26 இடங்கள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தாகவும் அத்துறை குறிப்பிட்டது.

பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும் அதே வேளையில் பேரிடர் தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணி அளவில் நிகழ்ந்த நிலச்சரிவில் கெந்திங்-பத்தாங் காலி சாலையில் அமைந்துள்ள ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் எனும் பொழுதுபோக்கு முகாம் முற்றாக அழிந்தது.

இச்சம்பவத்தில் மொத்தம் 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 24 பேர் உயிரிழந்த வேளையில் மேலும் 61 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


Pengarang :