ECONOMYSELANGOR

ஜனவரி 1 முதல் உணவு வியாபாரிகள் கட்டாயம் முகக்கவரி அணிய வேண்டும்

ஷா ஆலம், டிச 31: ஷா ஆலம் சிட்டி கவுன்சில், (எம்பிஎஸ்ஏ) உணவு வியாபாரத்தில் ஈடுப்படுபவர்கள் முகக்கவரி பயன் படுத்துவதை ஜனவரி 1 முதல் அமல்படுத்த உள்ளது.

ஷா ஆலம் மேயர் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட், கடந்த டிசம்பர் தொடக்கத்தில் நடைபெற்ற முழு எம்பிஎஸ்ஏ கூட்டத்தில் இந்த விஷயம் பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

“கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் முகக்கவரிகளின் பயன்பாடு அமல்படுத்தப்படும்.

“மேலும், இது வணிகர்களையும் பொது மக்களையும் தூய்மையைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கிறது,” என்று அவர் ஷா ஆலம் துணை மேயர் பிரியாவிடை விழாவில் கலந்து கொண்ட பின் கூறினார்.

அனைத்து உணவகங்களுக்கும் அறிவிப்புகளை வெளியிடுவதோடு, ஜனவரி முதல் வணிக உரிமங்களுக்கு முகக்கவரிகளை அணிவதையும் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் புதிய தேவையாக மாற்றும் என்று டாக்டர் நோர் ஃபுவாட் கூறினார்.

“மாநில அரசு, முகக்கவரிகளைப் பயன்படுத்துவது குறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது, மேலும் எம்பிஎஸ்ஏ இந்நடவடிக்கையை உணவகங்கள் அல்லது சந்தைகள் என பொருட்படுத்தாமல் அனைத்து நிலைகளில் செயல்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலத்தில் நடைபாதை வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்களுக்கு முகக்கவரிகளை பயன்படுத்துவது கட்டாயம் என்று அறிவித்தார்.

இந்த அணுகுமுறை கோவிட்-19 பரவுவதை தவிர்ப்பதோடு, உணவு நச்சுத்தன்மையும் தவிர்ப்பதோடு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :