MEDIA STATEMENTPBT

உணவகப் பணியாளர்களுக்கு கட்டாய முகக் கவரி – சுபாங் ஜெயாவில் ஜன.1ஆம் தேதி முதல் அமல்

ஷா ஆலம், ஜன 2- உணவகப் பணியாளர்கள் அனைவரும் முகக் கவரி அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறையை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப் படுத்தியுள்ளது.

உணவக மற்றும் உணவு வர்த்தக நடவடிக்கைகளுக்கான வர்த்தக மற்றும் லைசென்ஸ் நிபந்தனை கண்காணிப்பு 5ஆம் விதியில் இந்த உத்தரவு சேர்க்கப்பட்டுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வியூக மேலாண்மைப் பிரிவுத் துணை இயக்குநர் அஸ்பரிஷால் அப்துல் ரஷிம் கூறினார்.

இந்த கட்டாய முகக்கவரி விதிமுறை தொடர்பான அறிவிப்பு மாநகர் மன்றத்தின் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதோடு புதிதாக லைசென்ஸ் பெறுவோருக்கான அங்கீகாரக் கடிதத்திலும் இந்த நிபந்தனை இணைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆகவே, சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நிர்ணயித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் வணிகர்கள் முறையாக கடைபிடிப்பது அவசியமாகும் என அவர்  தெரிவித்தார்.

இந்த விதிமுறைகள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய உணவகங்கள் மற்றும் உண்வு அங்காடிக் கடைகளில் தமது தரப்பு அவ்வப்போது சோதனை மேற்கொள்ளும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விதிகளை மீறுவோருக்கு தொடக்கத்தில் அறிவுரைகளையும் எச்சரிக்கையையும் விடுப்போம். அதன் பின்னரே அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.


Pengarang :