ALAM SEKITAR & CUACAECONOMY

நிலச்சரிவைத் தடுக்க அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வடிகால் அமைப்பீர்- ஜமாலியா வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 2- நிலச்சரிவு சம்பவம் ஏற்படுவதைத் தடுக்க சீரான வடிகால் முறையை அமைக்கும்படி லில்லி அண்ட் ரோஸ் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தை பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஏற்பட்டதைத் போன்ற நிலச்சரிவு மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய பெட்டாலிங் ஜெயா, தாமான் மாயாங் குடியிருப்பு பகுதியில் முறையான வடிகால்கள் அமைப்பது அவசியமாகும் என அவர் சொன்னார்.

நீர் விரைந்து வெளியேறக் கூடிய வகையில் சீரான வடிகால் முறையை உருவாக்குவது அந்த ஆடம்பரக் குடியிருப்பு நிர்வாகத்தின் பொறுப்பாகும் என அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

அண்மையில் ஏற்பட்ட கன மழை காரணமாக இடிந்து விழுந்த அந்த ஆடம்பர குடியிருப்பு பகுதியின் வேலியை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர்கள், வடிகால் மற்றும் நீரிபாசனத் துறை அதிகாரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் பொறுப்பாளர்களுடன் ஜமாலியா கடந்த வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

இச்சம்பவத்திற்கு தீர்வு காண்பதற்காக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சந்திப்புக்கு நான் ஏற்பாடு செய்துள்ளேன். மேலும் அப்பகுதியை சீரமைப்பதற்கான பணிகளை வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை விரைந்து கொள்வதையும் உறுதி செய்யவுள்ளேன் என அவர் சொன்னார்.


Pengarang :