ALAM SEKITAR & CUACAECONOMY

குப்பைகளின் அளவைக் குறைக்க 3ஆர் கொள்கை அமல் செய்வீர்- பொது மக்களுக்கு எம்.பி.ஏ.ஜே. கோரிக்கை

ஷா ஆலம், ஜன 3- குப்பைகளின் அளவைக் குறைப்பதற்கு ஏதுவாக 3ஆர்  (குறைப்பு, மறு பயனீடு, மறுசுழற்றி) கொள்கையை அமல் செய்ய அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்.பி.ஏ.ஜே.) பொது மக்களை ஊக்குவிக்கிறது.

இந்நடவடிக்கையின் மூலம் குப்பைகளை அழிப்பதற்கு உண்டாகும் செலவினத்தை குறைக்க முடியும் என்பதோடு ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உறுதி செய்ய முடியும் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

நாம் அனைவரும் 3ஆர் கொள்கையை கடைபிடிப்போம். பயன்படுத்தியப் பின்னர் வீசக்கூடிய பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது, பொருள்கள் மற்றும் உபகரணங்களை மறுபடியும் அதே நோக்கத்திற்காக பயன்படுத்துவது, பயன்படுத்த முடியாத பொருள்களை வேறு நோக்கத்திற்குப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பது ஆகியவையே அந்த 3ஆர் கொள்கையாகும் என அது தெரிவித்தது.

அனைவரின் ஒத்துழைப்பும் இத்தகைய சிறந்த பழக்கங்களும் அம்பாங் ஜெயாவை சுத்தமான மற்றும் அழகிய பகுதியாக உருவாக்கும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் அம்பாங் ஜெயாவில் 19 கோடியே 34 லட்சத்து 80 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டதாகவும் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

 


Pengarang :