ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

மொத்த விற்பனை பல்பொருள் அங்காடியான எஸ்டி ரோஸ்யம் மார்ட்டில் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி

ஷா ஆலம், ஜனவரி 6: இங்குள்ள மொத்த விற்பனை பல்பொருள் அங்காடியான எஸ்டி ரோஸ்யம் மார்ட்டில் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 50 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடங்கு விற்பனை நடைபெறுகிறது.

அந்த அங்காடியின் உரிமையாளர் கூறுகையில், உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் உள்பட 1,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தள்ளுபடி விற்பனையில் இடம் பெற்றுள்ளன.

“இந்த கிடங்கு விற்பனை எஸ்டி ரோஸ்யம் மார்ட் ஷா ஆலம் கிளையில் மட்டுமே நடைபெறுகிறது. சுற்றியுள்ள அனைத்து குடியிருப்பாளர்கள் எங்கள் அங்காடிக்கு வர விரும்புகிறேன்,` என்றார்.

“ஒரு சாதாரண நாளில் கூட,  எஸ்டி ரோஸ்யம் மார்ட்டில் பொருள்களின் விலை 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைக்கப்படும். மேலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வசதியாக அனைத்து விற்பனை நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும்” என்று அதன் உரிமையாளர் கூறினார்.

மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (MBOR) ‘இல், முதல் 24 மணி நேர மொத்த சில்லறை விற்பனைச் சந்தை எனும் விருதைப் பெற்ற பின் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விழா உள்நாட்டு வர்த்தக அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டத்தோ ரோஜியா ஆபுடின் தலைமையில் நடைபெற்றது.

பொது மக்கள் தள்ளுபடியில் உள்ள பொருட்களை வாங்கவும் பொருட்கள் வீட்டிற்கு அனுப்பும் சேவையைப் பெறவும் உறுப்பினர் அட்டைக்கு பதிந்து கொள்ளலாம்.


Pengarang :