ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

 நீரில் மூழ்கி மாணவன் மரணம்

ஷா ஆலம், ஜன. 14: கிள்ளான் அருகே உள்ள சுங்கை காப்பார் இண்டா உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன், தனது நண்பர்கள் ஆறு பேருடன் தாசிக் செர்மினில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோத்தா அங்கேரிக் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நீர் மீட்புக் குழு (பிபிடிஏ) உட்பட மொத்தம் 11 உறுப்பினர்கள் மதியம் 12.16 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்ற உடனே சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) இயக்குநர் டத்தோ நோரஸாம் காமிஸ் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அவர்கள் 16 வயதான முஹம்மது கைருல் ஹமிசான் முஸ்தபாவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் ஏரியின் கரையில் இருந்து சுமார் 4.5 மீட்டர் தொலைவில் 3 மீட்டருக்கும் மேல் ஆழத்தில் ஏரியின் அடிப்பகுதியில் மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நோரசம் கூறினார்.

“மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக இங்குள்ள ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :