ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய கல்வி குழுவில்  தமிழருக்கான இட விவகாரம் குறித்து கல்வி அமைச்சரை  மனிதவள அமைச்சர் வீ.சிவக்குமார் சந்திக்கிறார்

 

புத்ரா ஜெயா ஜனவரி 22 ;-  மலேசிய இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ள  விவகாரமான தேசிய கல்வி குழுவில் தமிழர் நியமனம் குறித்து  மனிதவள அமைச்சர் வீ. சிவக்குமார் கல்வி அமைச்சரை  வரும் புதன்கிழமை காலை  சந்திக்கவுள்ளதாக   தெரிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பு குரல் தொடர்பாக ஏற்கனவே  தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர்  க. சரஸ்வதி கல்வி அமைச்சரிடம் பேசி உள்ள நிலையில்  இப்பொழுது  மனிதவள  அமைச்சரும்  தேசிய கல்வி குழுவில் தமிழர் ஒருவர்  இடம் பெறாதது குறித்து பேச உள்ளது, இந்திய சமுதாயம் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்க்கல்வி மீது கொண்டுள்ள  அக்கறையை கல்வி  அமைச்சருக்கு  புலப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மிக முக்கியமாக எதிர்காலத்தில் இது போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில்  இரு அமைச்சர்களும் எப்படி இணைந்து செயல்பட முடியும்,  கல்வி  அமைச்சருக்கு தமிழ்க்கல்வி மற்றும் பள்ளிகள்  பிரச்சனைகளில்  எம்மாதிரியான  ஆலோசனைகள்  தேவைப்படும்,  அதற்கு பரஸ்பரம் உதவுதல் குறித்த விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Pengarang :