ALAM SEKITAR & CUACAECONOMY

இந்தோனேசியாவின் மலுக்கு கடலின் வடக்கே மிதமான நிலநடுக்கம்- மலேசியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை

 கோலாலம்பூர்,  ஜன 24- இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு கடலில் இன்று காலை 10.13 மணியளவில் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தோனேசியாவின் தாலாட் தீவில் இருந்து தென்கிழக்கே 155 கிலோமீட்டர் தொலைவில் 72 கிலோ மீட்டர்  ஆழத்தில் நிலநடுக்கம் மையமிட்டிருந்தது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்    தெரிவித்தது.

இருப்பினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என முதற்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி 18ஆம் தேதி இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நிலநடுக்கம் தாலாட் தீவில் இருந்து 163 கிலோ மீட்டர் தெற்கில் 67 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.


Pengarang :