ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் வெள்ளம்- 422 பேர் எட்டு துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

ஜோகூர் பாரு, ஜன 24- ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ள வேளையில் இன்று பிற்பகல் 2.00 மணி நிலவரப்படி மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 422 பேர் எட்டு துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக இன்று காலை 11.00 மணி முதல் குளுவாங், கோத்தா திங்கி, சிகாமாட் ஆகிய மாவட்டங்களில் அந்த எட்டு துயர் துடைப்பு மையங்களும்  கட்டங் கட்டமாக திறக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல் குழு கூறியது.

சிகாமாட் மாவட்டத்திலுள்ள ஐந்து துயர் துடைப்பு மையங்களில் 155 குடும்பங்களும் குளுவாங்கிலுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் ஒன்பது குடும்பங்களும் கோத்தா திங்கியில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் ஆறு குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அச்செயல்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இதனிடையே, மெர்சிங், குளுவாங், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் மிகவும் கடுமையான மழை தொடர்ந்து பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

மேலும் பொந்தியான், சிகாமாட், பத்துபகாட் ஆகிய மாவட்டங்களில் அடைமழை தொடர்ந்து பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதோடு தங்காக் மற்றும் மூவாரில் மழைப் பொழிவு எச்சரிக்கை அளவில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


Pengarang :