ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாடு (செல்ஹாக்) இரண்டாவது முறையாக மார்ச் மாதம் நடைபெற உள்ளது

ஷா ஆலம், ஜன 26: சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டின் (செல்ஹாக்) இரண்டாவது பதிப்பு மார்ச் 10 முதல் 12 வரை நடைபெற உள்ளது. இதன் வணிகப் பரிவர்த்தனைகள் RM50 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக மன்றம், இஸ்லாமிய நிதி, கண்காட்சி, வணிகப் பொருத்தம், ஹலால் விநியோகம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய ஆறு கூறுகளில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 8,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவதையும் இலக்காகக் கொண்டிருப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

“இந்த கண்காட்சி உணவு மற்றும் பானங்கள், மருந்தகம் மற்றும் சுகாதார பராமரிப்பு, ஃபேஷன், மூலப்பொருட்கள் மற்றும் ஹலால் பொருட்கள், அழகு பொருட்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

“தொழில்முனைவோருக்கு  இந்த திட்டம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதுடன் வணிக வாய்ப்புகளையும் ஆராய்வதற்கான ஒரு தளமாகவும் அமையும்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அரச நிறுவனங்களின் கீழ் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஒன்றாக இத் திட்டத்தில் பங்கேற்க அமிருதீன் ஊக்குவித்தார்.

சிலாங்கூர் ஹிஜ்ரா அறக்கட்டளை (ஹிஜ்ரஹ்), சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் மற்றும் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (PLATS) ஆகியவற்றின் பங்கேற்பாளர்கள் அவரவர் தயாரிப்புகளை இத்திட்டத்தின் வழி அறிமுகப்படுத்தலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

செல்ஹாக் முதன் முதலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷா ஆலம் கன்வென்ஷன் சென்டரில் (SACC) 200க்கும் மேற்பட்ட கண்காட்சி யாளர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் RM37.73 மில்லியன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :