ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு தைப்பூச  திருநாளுக்கு  KTM சிறப்பு  கட்டண கழிவை வழங்குகிறது

கோலாலம்பூர் ஜன 28 ;- இவ்வாண்டு தைப்பூச திருநாளுக்காக மலாயன் ரயில்வே 3 பகல் 2 இரவுகளுக்கு தொடர்ச்சியாக சிறப்பு 24 மணி நேர சேவையை பத்து மலைக்கு  வழங்குகிறது.
இந்த சேவை பிப்ரவரி மாதம் 4ம் தேதி  முதல் 6ம் தேதி வரை  பத்துமலை – கோலக் கிள்ளான் பயண பாதை மற்றும் சுங்கை காடுட் – பத்துமலை பயண பாதைகளுக்கு வழங்கப்படுகிறது.
அதே வேளையில்  12 வயதுக்கு குறைந்த  சிறுவர்கள்,  முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு  50 சதவீத கட்டண கழிவு  உண்டு. எந்த நேரத்திலும் பயன்படுத்த ஏற்றார்  போல்  குறைந்த கட்டண 5 ரீங்கிட்  கார்டுகளையும்  எல்லா  கே.டி. எம்  நிலையங்களிலும்  வாங்கலாம்  என்று  தைப்பூச பயணிகளுக்கு   அது தெரிவித்துக் கொள்கிறது

Pengarang :