ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தைப்பூசத்தை முன்னிட்டு சூடுபிடித்தது தேங்காய் விற்பனை

கோலாலம்பூர், ஜன 31- வேண்டுதல்களை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துவது இந்து சமய நெறிகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

முருகப் பெருமான் வெள்ளி இரதம் ஏறி வீதி வலம் வரும் போது பக்தர்கள் பரவசம் பொங்க தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனைச் செலுத்துவதை பத்து மலை, பினாங்கு போன்ற பெரிய நகரங்களில் காணலாம்.

அந்த வகையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு தேங்காய்க்கான தேவை அதிகரித்துள்ளது. பினாங்கு, ஜாலான் டத்தோ கிராமாட்டில் தேங்காய் கடை வைத்திருக்கும் எம். ஜேயெல் ஜெயச்சந்திரன் வாடிக்கையாளர்களுக்கு தேங்காய்களை விநியோகிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

அண்மைய ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது தேங்காய் விற்பனையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தைப்பூசத்தின் போது இரத ஊர்வலம் மற்றும் தேங்காய் உடைக்கும் சடங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

பெர்னாமா


Pengarang :