MEDIA STATEMENTNATIONAL

சிறுமி காலில் தீக்காயம் ஏற்பட காரணமான குழந்தை பராமரிப்பாளருக்கு 5,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், பிப் 3: சிறுமி ஒருவரின் இடது காலில் தீக்காயம் ஏற்பாட காரணமாக இருந்த குழந்தை பராமரிப்பாளருக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

நீதிபதி இஸ்ரலிசாம் சனுசி, 20 வயதான அக்குழந்தை பராமரிப்பாளருக்கு RM1,000 ஜாமீன் வழங்கி இன்று முதல் ஆறு மாதங்களுக்கு 36 மணிநேரம் சமூக சேவைப் பணிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார்.

அபராதத்தைச் செலுத்த தவறினால் ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அபராதத்தைச் செலுத்தினார்.

சிறுமியின் இடது காலில் தீக்காயங்கள் ஏற்படுத்தியக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது. குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் இக்குற்றம் விசாரிக்கப்பட்டது.

முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் ரோஸ்லிசி சுலைமான், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தை என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பாடம் கற்பிக்கத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசாமுதீன் அப்துல்லா அஜீஸ், தனது தரப்பினர் அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததன் அடிப்படையில் நன்நடத்தை மற்றும் சமூகச் சேவை வடிவில் தண்டனை வழங்குமாறு கோரினார்.

– பெர்னாமா


Pengarang :