ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

புத்தி சுவாதீனமற்ற நபரால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார்

கங்கார், பிப் 3- புத்தி சுவாதீனமற்ற நபர் ஒருவர் நாற்காலியால் தாக்கியதில் சங்லாங் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவம் இங்குள்ள அல்வி பள்ளிவாசலில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்ததாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஷாருடின் முகமது யூசுப் கூறினார்.

அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய உரையைச் செவிமடுத்தப் பின்னர் அங்குள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்கான உண்டியலில் பணத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது அவ்வாடவர் சிறிய நாற்காலியைக் கொண்டு தாக்கியதாக  அவர் சொன்னார்.

இத்தாக்குதலில் 87 வயதான டத்தோ முகமது ஜைன் ஹம்சாவுக்கு தலையின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 65 வயது நபர் ஒருவரை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளோம். காயம் ஏற்படுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் புத்தி சுவாதீனமற்றவர் என கூறப்படுகிறது.  தாக்கப்பட்ட முகமது ஜைய்ன் கடந்த 1978 முதல் 1986 வரை இரு தவணைகள் சங்லாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.


Pengarang :