ALAM SEKITAR & CUACAANTARABANGSA

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி அபாயம் இல்லை

ஜாகர்த்தா, பிப் 12- ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவான வலுவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வட சுமத்திரா பகுதியை நேற்று மாலை உலுக்கியது.

எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று அந்நாட்டின் தேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது.

நேற்று காலை 3.55 மணியளவில் ஏற்பட்ட இந் நிலநடுக்கம் தாலாவுட் தீவின் மெலேங்குவானி பகுதியில் மையமிட்டிருந்ததாக அந்த வானிலை ஆய்வு நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிடுக்கம் காரணமாக சுனாமி பேரிடர் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்றும் அது தெரிவித்தது.


Pengarang :