SELANGOR

ரிவர்சைடு ஹைப்ரிட் அப்கிரேட் சிஸ்டம் (HORAS) 600ஐ சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் கண்காணித்து வருகிறது

ஷா ஆலம், பிப் 22: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) தொடர்ந்து “ரிவர்சைடு ஹைப்ரிட் அப்கிரேட் சிஸ்டம்“ (HORAS) 600 ஐக் கண்காணித்து, நீர் விநியோகத்தின் அளவு மற்றும் தரத்தை உறுதி செய்கிறது.

மாற்று நீர் ஆதாரக் குளங்களையும் தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் நிறுவனம் அவைகளைக் கண்காணித்து வருகிறது.

“HORAS 600“ என்பது மாநில அரசின் மூல நீர் உத்தரவாதத் திட்டத்தின் (SJAM) ஒரு அங்கமாகும். HORAS 600 லிருந்து இந்த மாற்று மூல நீர் சுங்கை சிலாங்கூர் ஆற்றின் ஓட்ட அளவை அதிகரிக்கவும், சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை திங்கி அணைகளில் இருந்து நீர் திறப்பைக் குறைக்கவும் பாய்ச்சப்படும்.

“HORAS 600“ வறண்ட காலங்களில் 100 நாட்களுக்கு மூல நீரின் மாற்று விநியோகத்தை வழங்கும் திறன் கொண்டது. அதே நேரத்தில் அதை மூல நீரின் மாசுபாடு பிரச்சனைகளைச் சமாளிக்க நதியில் நீரின் விகிதத்தை அதிகரிக்க பயன்படுத்தலாம்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் சிலாங்கூர் பட்ஜெட் 2021ஐ சமர்ப்பித்தபோது, நீர் விநியோகத் தடைகளைச் சமாளிக்க நான்கு வழிகளைக் கோடிட்டுக் காட்டினார்.

சுங்கை காங் நீரைச் சுத்திகரிக்கும் நானோ தொழில்நுட்ப சுத்திகரிப்பு முன்னோடித் திட்டம் மற்றும் உலு முக்காச் சவுக்கின் மேல் பகுதியில் முன்னெச்சரிக்கை அமைப்பிற்கான நீர் தர டெலிமெட்ரி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றார்.


Pengarang :