Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim menunjukkan beg fail dengan corak tenunan songket Sarawak ketika hadir untuk membentangkan Belanjawan 2023 Malaysia Madani di Dewan Rakyat, Kuala Lumpur pada 24 Februari 2023. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYNATIONAL

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படாது

கோலாலம்பூர், பிப் 24- பொருள் சேவையை வரியை (ஜி.எஸ்.டி.) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்களில் பெரும்பாலோர் இன்னும் சிரமத்தில் உள்ளனர், உணவு பணவீக்கம் ஐந்து விழுக்காடாக இருப்பது, குறைவான சம்பள விகிதம் ஆகிய சூழல்களைக் கருத்தில் கொள்கையில் அந்த வரியை விதிப்பதற்கு இது சரியான தருணம் அல்ல என்று 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்..

ஆடம்பர பொருட்களுக்கு வரி

ஆற்றல் உள்ளவர்களுக்கு வரி அடிப்படையை விரிவாக்கம் செய்வதற்கான புதிய நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு தொடங்கி ஆடம்பர பொருட்களுக்கு வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கைக்கடிகாரம், அழகு சாதனம் உள்ளிட்ட பொருட்களுக்கு அதன் மதிப்கேற்ப வரி உயர்த்தப்படும் என்றார் அவர்.


Pengarang :