ALAM SEKITAR & CUACAECONOMY

உலு கிளாங் தொகுதி சேவை மையத்தில் மூலிகைத் தோட்டம்- மந்திரி புசார் பாராட்டு

கோம்பாக், பிப் 26- தொகுதி சேவை மையத்தில்  “லாமான் ஹெர்பா“ எனும் பெயரில் மூலிகைத் தோட்டத்தை உருவாக்கும் உலு கிளாங் தொகுதியின் முயற்சியை மந்திரி புசார்  பாராட்டியுள்ளார்.

மக்கள் தகவல்களைப் பெறக்கூடிய அல்லது புகார் செய்யக்கூடிய இடமாக மட்டுமின்றி அவர்களுக்கு பயன் தரக்கூடிய மையமாகவும் இத்தகைய சேவை மையங்கள் விளங்குவதாக மந்திரி  புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொது மக்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு ஏதுவாக சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதி சேவை மையங்களுக்கும் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்த மூலிகைத் தோட்டம் அமைந்துள்ளது என்று  அவர் குறிப்பிட்டார்.

உலு கிளாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஹாரி சுங்கிப் தனது தொகுதி சேவை மையத்தில் மூலிகைத் தோட்டத்தை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்த தோட்டத்தை உருவாக்குவதற்கு 30,000 வெள்ளி வரை செலவிடப்பட்டதாக அறிகிறேன் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள உலு கிளாங் தொகுதி சேவை மையத்தில் அமைந்துள்ள இந்த மூலிகைத் தோட்டத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதர சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் சேவை மையங்களில் இத்தகைய சமூகத் தோட்டங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :