ECONOMYMEDIA STATEMENT

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான மானியம் தொடர்பாக நிதியமைச்சுடன் பேச்சு- சிவக்குமார் அறிவிப்பு

கோலாலம்பூர், பிப் 26- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த  2023  ஆம்  ஆண்டுக்கான பட்ஜெட்டில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களும் ஐந்து கோடி வெள்ளியை ஒதுக்கி இருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இந்த ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கீடு விவரங்கள் குறித்து  நிதி அமைச்சுடன்  பேச்சுவார்த்தை  நடத்துவேன் என்று மனித வள அமைச்சர் v. சிவகுமார் தெரிவித்தார்.

பட்ஜெட்டில்  முஸ்லிம் அல்லாத  வழிபாட்டுத் தலங்களுக்கு  முதல் முறையாக மத்திய அரசிடமிருந்து நிதியை பெறுவது இதுவே முதல் முறை என்பதால்  இந்த நிதி குறித்து முறையாக நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இந்து, சீனம், புத்த மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு இந்த நிதி முறையாக சென்றடைய வேண்டும்.

 இது நிச்சயமாக அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் சொன்னார்.

இது தவிர்த்து மித்ராவுக்கு பத்து கோடி வெள்ளியும் தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு மூன்று கோடி வெள்ளியும் இம்முறை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Pengarang :