NATIONAL

மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் இந்து சங்கப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

கோலாலம்பூர், பிப் 28- மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் தலையாய
பிரச்சனைகள் குறித்து மனிதவள அமைச்சர் வ. சிவகுமாருடன் மலேசிய இந்து சங்கம் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது.

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன், துணை தலைவர்  கணேஷ் பாபு,
உதவித் தலைவர் சாந்தா மற்றும் துணை செயலாளர் அழகேந்திரன் ஆகியோர்    மனிதவள அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியர்கள் எதிர் நோக்கி இருக்கும் குடியுரிமை, பிறப்பு பத்திரம், மதமாற்றம் குறித்தும்
அவர்கள் எடுத்துரைத்தனர். குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகள்
இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும்
கோரிக்கை முன் வைத்தனர்.

நாட்டில் 2,500 இந்து ஆலயங்கள்  முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்  வேளையில்
அர்ச்சர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்குத் தீர்வு காண மனிதவள அமைச்சர் சிவகுமார் முன் வர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

சிறைச்சாலைகளில் இந்தியக் கைதிகளுக்குச் சமய போதனைகளைப் போதிப்பதற்குக் கூடுதல் ஆசிரியர்கள் தேவைபடுவதையும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் எடுத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :