ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

சட்டவிரோதக் குப்பை மேலாண்மைச் சட்டத்தில் கையெழுத்திடுவது குறித்து மாநில அரசு பரிசீலனை.

ஷா ஆலம், மார்ச் 17- சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படும் பிரச்சனைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் பொருட்டு 2007ஆம் ஆண்டு திடக்கழிவு மற்றும் பொது துப்புரவு மேலாண்மைச் சட்டத்தில் (சட்டம் 672) கையெழுத்திடுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

இந்த சட்டத்தில் கையெழுத்திடுவதன் மூலம் சட்டவிரோதக் குப்பை மீதான அமலாக்க மற்றும் கண்காணிப்புப் பணிகளை திடக்கழிவு மற்றும் பொது துப்புரவுக் கழகம் (எஸ்.டபள்யு.கார்ப்) மேற்கொள்ளும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

குப்பை மேலாண்மைத் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான ஏகபோக மற்றும் ஒரே அமைப்பாக இந்த எஸ்.டபள்யு.கார்ப் விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது தங்கள் அதிகார வரம்பிற்குப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத குப்பைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்தந்த ஊராட்சி மன்றங்கள் கவனித்து வருகின்றன. அமலாக்க உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வரையறைக்குட்பட்டுள்ளதோடு பல்வேறு பணிகளை ஆற்ற வேண்டிய நிர்பந்தமும் அவர்களுக்கு உள்ளது என்று அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் இதனை கூறினார்.

சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவோருக்கு 100,000  வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்க இந்த 672வது சட்டம் வகை செய்கிறது.

இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு 1,000 வெள்ளி மட்டுமே அபராதம் விதிக்க நடப்புச் சட்டம் வகை  செய்கிறது. இது குற்றவாளிகளுக்கு பய  உணர்வை ஏற்படுத்துவதாக அமையவில்லை என்றார் அவர்.


Pengarang :