ECONOMYWANITA & KEBAJIKAN

இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்பு திட்டம்-  எம்.பி.களுக்கு அமைச்சர் சிவகுமார் விளக்கம் 

கோலாலம்பூர், மார்ச் 24- மனித வள அமைச்சின் கீழ் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ் இல்லத்தரசிகள் சமூக நல பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKSSR) குறித்து ஒற்றுமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  மனித வளத்துறை அமைச்சர் வ சிவகுமார் நேற்று முழு விளக்கம் அளித்தார்.

இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKSSR) 1 டிசம்பர் 2022 முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டம் இல்லத்தரசிகள்  குடும்பத்தை நிர்வகிக்கும் போது ஏற்படும் விபத்துகளுக்கு சமூக நல பாதுகாப்பை  வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இல்லத்தரசிகள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் ஊதியம் இல்லாத ‘கவனிப்பு பொருளாதாரம்’ துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான தனிநபர்களை உள்ளடக்கியது. அவர்கள்  வேலை வாய்ப்புத் துறைக்கு வெளியே இருப்பதால் சமூகப் பாதுகாப்பு அல்லது அரசாங்க உதவி இல்லாத அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

 அந்த வகையில் இவர்களுக்கு உதவ இந்த சமூக நல பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.

இந்த விளக்க கூட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு இது தொடர்பாக பல கேள்விகளை முன் வைத்த போது அந்த கேள்விகளுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் முறையாக பதில் அளித்தார்.

மேலும் சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ அஸ்மானும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.


Pengarang :