ECONOMYMEDIA STATEMENT

ஷா ஆலமில் “ஆல் இன் ஆல்” உணவகத்தை மனிதவள அமைச்சர் சிவக்குமார் திறந்து வைத்தார்

ஷா ஆலம், மார்ச் 26- இங்குள்ள செக்சன் 25, ஸ்ரீ மூடா எக்சிஸ் தொழில்பேட்டைப் பகுதியில்  அமைந்துள்ள “ஆல் இன் ஆல்” உணவகத்தை மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கப் பொறுப்பாளர்கள், பிரமுகர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சிவக்குமார், இந்திய இளைஞர்கள் இத்தகைய வர்த்தகத் துறைகளில் துடிப்புடன் ஈடுபடுவது கண்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

சைபர்ஜெயாவில் தங்கள் முதல் உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் இதன் உரிமையாளர்கள் இங்கு இரண்டாவது கிளையைத் திறந்துள்ளனர். வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையை அவர்கள் மிகவும் நிதானத்துடனும் கவனத்துடனும் மேற்கொள்வது பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார்.

உணவகத் துறை எதிர்நோக்கி வரும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதாக கூறிய அவர், இந்தியர்களின் இதர பாரம்பரியத் துறைகள் எதிர்நோக்கும் ஆள்பலப் பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆல் இன் ஆல் உணவகத்தின் நிறுவனரும் இயக்குநருமான தீபன் கூத்தப்பெருமாள், உணவகத் துறையினர் எதிர்நோக்கி வந்த அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு கண்ட அமைச்ச்ர் சிவக்குமாருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னார்.


Pengarang :