MEDIA STATEMENTPBT

செலாயாங் நகராண்மைக் கழகம் இரு மாதங்களில் 4.1 கோடி வெள்ளி மதிப்பீட்டு வரியை வசூலித்தது

செலாயாங், ஏப் 1- இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை செலாயாங் நகராண்மைக் கழகம் 4 கோடியே 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 2023ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு வரியை வசூலித்துள்ளது.

இவ்வாண்டிற்கான மதிப்பீட்டு வரியாக 5 கோடியே 70 லட்சம் வெள்ளியை வசூலிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இது 72.06 விழுக்காடாகும் என்று நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் பைசால் அகமது தர்மிஸி கூறினார்.

இதே காலக்கட்டத்தில் நிலுவையில் உள்ள வரித் தொகையில் 30.12 விழுக்காட்டை அதாவது 36 லட்சம் வெள்ளியை நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளதாக அவர் சொன்னார்.

இன்னும் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வரித் தொகையின் மதிப்பு 1 கோடியே 20 லட்சம் வெள்ளியாகும் என்று செலாயாங் நகராண்மைக் கழகத்தின் மார்ச் மாதத்திற்கான கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதை எளிதாக்கும் நோக்கில் இணையம் வழி வரி செலுத்தும் இயக்கத்தை நகராண்மைக் கழகம் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும்  அவர் கூறினார்.

நகராண்மைக் கழகத்திற்குப்ட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மைஎம்பிஎஸ், லசாடா, ஷோப்பி, செப்பாட் போன்ற இணையத் தளங்கள் வாயிலாக வரியைச் செலுத்துவதற்குரிய வசதி கடந்த ஜனவரி முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

 


Pengarang :