MEDIA STATEMENTNATIONAL

பிளானட் ரேட் முதலீட்டு மோசடி திட்டம் முறியடிக்கப்பட்டது, நிறுவனத்தின் இயக்குனர் குற்றம் சாட்டப்பட்டார்

கோலாலம்பூர், ஏப்ரல் 7: பிளானட் ரேட் முதலீட்டு மோசடி திட்டத்தைச் செயல்படுத்திய நிறுவனத்தின் இயக்குனர் உட்பட மூன்று உள்ளூர் ஆடவர்கள்  6 பெண்கள் பொலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.
அரச மலேசிய போலீஸ் துறை செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் கூறுகையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 420 மற்றும் நிதிச் சேவைகள் சட்டம் 2013 இன் 137(1) பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறுவனத்தின் இயக்குநர் மீது 109  வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற ஏழு பேரும் விடுவிக்கப்பட்டு அரசு தரப்பு சாட்சிகளாக மாறினார்கள் என்றார்.

ஜனவரி 2021 முதல் தற்போது வரை, வணிக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முதலீட்டு மோசடித் திட்டம் தொடர்பான 92 பொலிஸ் அறிக்கைகளை ரிம 17,547,414.50 இழப்பு மதிப்புடன் பெற்றுள்ளது.
மொத்த ரிம 700,533.47 மதிப்புள்ள 27 வங்கிக் கணக்குகள், ரிம 1,165,800 மதிப்பீட்டில் ஆறு வாகனங்கள் மேலும் தொடர்புடைய நான்கு நிறுவனங்களின் ரிம 11,000,000 பங்குகள் உட்பட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நூர்சியா கூறினார்.

இதற்கிடையில், முதலீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட வேறு நபர்கள் இருந்தால் உடனடியாக முன் வந்து காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக,  மலேசிய அனைத்துலக மனித உரிமையம்  கெமனுசியான் மஸ்யராகத் அந்தரபாங்சா மலேசியா அமைப்பு (MHO) முதலீட்டுத் திட்ட மோசடியில் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் இருப்பதாக கூறியது, அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என  அஞ்சி   அல்லது  சில தரப்பினரால் அச்சுறுத்த படுவதால், காவல்துறையில் புகார் அளிக்கவில்லை   என்கிறது.


Pengarang :