Caption pix CH8-9 Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari(tengah) menjawab soalan media di sidang media turut bersama Pengasas dan Pengarah Urusan Kumpulan NCT, Dato’ Sri Yap Ngan Choy(kiri) dan Speaker Dewan Negeri Ng Suee Lim(kanan) selepas Majlis pecah tanah NCT Smart Industrial Park di Movenpick Convention Centre, Sepang pada 7 April 2023. Foto MOHD YUSN ARIFFIN/SELANGORKINI
ECONOMY

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை சிலாங்கூர்  வழங்கும் மந்திரி புசார் நம்பிக்கை

சிப்பாங், ஏப்ரல் 7:  2025 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தனது பங்களிப்பை 30 சதவீதமாக உயர்த்த சிலாங்கூர் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

சிலாங்கூர் கிழக்கு மேம்பாட்டுத் திட்டமான பெம்பங்குணன் செரந்தௌ பெர்செபாடு செலாத்தான் சிலாங்கூர் (IDRISS) மற்றும் அமான் பெரிண்டஸ்ட்ரியன் பின்டர் என்சிடி போன்ற திட்டங்களால் இது  அடையப்பட கூடும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“என்சிடி மற்றும் ஐடிஆர்ஐஎஸ்எஸ் போன்ற திட்டங்களின் மூலம், பொருளாதார நடவடிக்கைகளை தூண்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது போன்ற முக்கிய முயற்சிகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், மேலும் உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

பெரிய திட்டங்கள் இல்லாவிட்டாலும், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 2018 முதல் ஆண்டுக்கு 0.2 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, என்றார்.


– பெர்னாமா


Pengarang :