ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

ஆறு இடங்களில் மாபெரும் மலிவு விற்பனை- 36,700 கோழிகள் விற்பனைக்கு வைக்கப்படும்


பெட்டாலிங்  ஜெயா, ஏப் 9- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனை இம்மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மாநிலத்தின் ஆறு இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்த விற்பனையில் 36,700 கோழிகள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அதிகமானோர் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக விற்பனை நேரம் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 நீட்டிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 சுமார் 50,000 பேர் பயனடையக்கூடிய விற்பனையின் மூலம் 15 லட்சம் வெள்ளி விற்பனையை பதிவு செய்ய முடியும் எனக் கருதுகிறோம். இந்த விற்பனைக்கான செலவில் 30 விழுக்காட்டை மாநில அரசு மானியமாக வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த மலிவு விற்பனை அன்றைய தினத்துடன் நிற்காமல் ஏப்ரல் 20 வரை ஒன்பது இடங்களில் நடைபெறும் என்றும் அவர் சொன்னார். 

இந்த மலிவு விற்பனையில் முழு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் அரசி 5 கிலோ 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

 


Pengarang :