ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கிலில் புயலால் பாதிக்கப்பட்ட எழு பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சிப்பாங், ஏப் 9- புயலால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் டிங்கில், புத்ரா பெர்டானா, பூலாவ் மெராந்தி சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஏழு பேரும் நேற்றிரவு 10.00 மணியளவில் அந்த மண்டபத்தில் அடைக்கலம் நாடியதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் கூறினார்.

நேற்று வீசிய பலத்த புயல் காற்றில்  வீட்டின் கூரை முழுவதுமாக பறந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த புயல் காற்றில் வீடுகள் சேதமடைந்தவர்களிடமிருந்து தாங்கள் இதுவரை புகாரைப் பெறவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று மாலை வீசிய பலத்த புயல் காற்றில் கம்போங் பூலாவ் மெராந்தி, தாமான் புத்ரா பெர்டானா, பங்சாபுரி அங்சானா புக்கிட் பூச்சோங் 2, உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

 


Pengarang :