ECONOMYMEDIA STATEMENT

செந்தோசா தொகுதியில் 446 பேருக்கு நோன்புப் பெருநாள் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

கிள்ளான், ஏப்ரல் 14- நோன்புப் பெருநாளை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் வசிப்பவர்களுக்கு 200  வெள்ளி மதிப்புள்ள மொத்தம் 446 ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்  விநியோகிக்கப்பட்டன.

 குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு வழங்கும் நோக்கில் இந்தொகுதியில்  500 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது  முதல்  இதுவரை 446 பேர் இந்த பற்றுச் சீட்டைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 2023  பாடல் திறன் போட்டி தொடர்பாக நேற்றிரவு இங்கு நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தப் பற்றுச்சீட்டை இன்னும் பெறாதவர்கள் வரும்  ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் செந்தோசா தொகுதி  சேவை மையத்தில் அதனைப் பெறலாம் என்று கூறினார்.

பெருநாளைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும்  சிரமத்தை குறைக்கும் நோக்கில் இந்த பற்றுச்சீட்டு திட்டம் அமல்படுத்தப்படுகிறது 

இந்த பற்றுச்சீட்டின் மதிப்பு 2023 வரவு செலவுத் திட்டத்தில் 200 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநில அரசு 1 கோடியே 64 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பும் மாதத்திற்கு 2,000 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக ஆக உயர்த்தப்பட்டது.

Pengarang :