ECONOMYMEDIA STATEMENT

உள்நாட்டு வர்த்தக அமைச்சின் சோதனையில் 98,840 லிட்டர் டீசல் பறிமுதல்

சிரம்பான், ஏப் 14- போர்ட்டிக்சனில் உள்ள வளாகம் ஒன்றில் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நேற்று மாலை மேற்கொண்ட சோதனையில் 212,506 வெள்ளி மதிப்புள்ள  98,840 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டது.

ஸ்ரீ லுக்குட் தொழிற்பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனையின் போது அனுமதிக்கப்பட்ட 60,000 லிட்டரை விட அதிக டீசல் அங்கு சேமிப்பில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் நெகிரி செம்பிலான் மாநில இயக்குநர் முகமது ஜஹிர் மஸ்லான் கூறினார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஓப்ஸ் திரிஸ் நடவடிக்கையின் போது டீசல் மோசடி நடவடிக்கைகளை கண்டறிவதற்காக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மேற்கொண்டு வரும் ஆக்ககரமான நடவடிக்கையாக இந்த மொத்த வியாபாரிகள் மீதான சோதனை அமைந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பில் 1961ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :