ECONOMYMEDIA STATEMENT

நாட்டின் ஒன்பது இடங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும்

கோலாலம்பூர், ஏப் 24- தீபகற்ப மலேசியாவில் ஏழு இடங்களும் சபாவில் இரு இடங்களும் முதல் கட்ட (எச்சரிக்கை நிலை) வெப்ப நிலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நீடிக்கும் இந்த தட்பவெப்ப நிலையின் போது வெப்ப நிலை 35 முதல் 37 டிகிரி வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

தீபகற்ப மலேசியாவின் கோல திரங்கானு, ஜெலி, கோல கிராய், பாசீர் மாஸ், தானா மேரா, ரொம்பின், ஜெம்போல் ஆகிய பகுதிகளில் இந்நிலை நீடிக்கும் என அது தெரிவித்தது.

சபா மாநிலத்தின் பியுஃபோர்ட் மற்றும் நபாவான் ஆகிய பகுதிகளில் கூடுதல் பட்ச வெப்ப நிலை பதிவாகும் என வானிலை ஆய்வுத் துறை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.


Pengarang :