ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களும் இணையவேண்டும். பிரதமர் அழைப்பு

புத்ராஜெயா, மே 1: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2023ஆம் ஆண்டு தொழிலாளர் தின விழாவில், நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நிதியமைச்சராக இருக்கும் அன்வார், தான் அரசாங்கத்துக்கு பொறுப்பேற்றபோது, நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருந்தது, RM1.5 டிரில்லியன் கடனாக இருந்தது,  இந்த கடன் ஓரளவு ‘கொள்ளையர்களால்’ ஏற்பட்டது. “பொருளாதாரம் வளர, வருவாய் வளர வேண்டுமானால், நீங்கள் போராடி பெரும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார்.
தொழிலாளர்களும் என்னைப் போலவே ஊழலுக்கு எதிரான போராட்டத்தில்  ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ”என்று அவர் இன்று இங்கு “மடாணி மலேசிய கொள்கையில்  தொழிலாளர்கள்  பங்கு ” என்ற தலைப்பில் தொழிலாளர் தின 2023 கொண்டாட்ட விழாவில் கூறினார்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் நாட்டின் வருவாயை அதிகரிக்கும், அதன் மூலம் மக்கள் பயனடையவும் அனுமதிக்கும் என்று அன்வார் கூறினார்.
– பெர்னாமா

 


Pengarang :