ANTARABANGSAECONOMY

சுங்கை பூலோ சிறை அனுபவங்களை நினைவுக் கூர்ந்தார் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், மே 6- சுங்கை பூலோ சிறைச்சாலையின் பணியாளர் குடியிருப்பை சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

அந்த குடியிருப்பை சீரமைக்கும் பணியை இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்கும்படி உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மேலும் சுங்கை பூலோ சிறைச்சாலை வளாகத்தில் உள்ள டான்ஸ்ரீ மூராட் அகமது மண்டபத்தில் குளிசாதன வசதியை ஏற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் அவர் அங்கீகாரம் வழங்கினார்.

நேற்று இங்கு நடைபெற்ற மலேசிய சிறைச்சாலை துறையின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாக அவர் சுங்கை பூலோ சிறைச்சாலையின் சுகாதார கிளினிக்கையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி, சிறைச்சாலைத் துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர்டின் முகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தாம் சிறையில் கைதியாக இருந்த போது தமக்கு சிறப்பான கவனிப்பு வழங்கிய சுங்கை பூலோ சிறைச்சாலையின் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அன்வார் குறிப்பிட்டார்.

தாம் சிறைக்கைதியாக இருந்த அந்த ஒன்பது ஆண்டு காலம் பரிவு, கருணை மற்றும் நேர்மைக்கான அர்த்தத்தை தாம் கற்றுக் கொள்வதற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்கியது என்று நிதியமைச்சருமான அவர் கூறினார்.


Pengarang :