EKSKLUSIFMEDIA STATEMENT

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கூடுதல் காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர

புத்ரா ஜெயா, மே 6- விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் ஆறு மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக கூடுதல் போலீஸ்காரர்களை பணியமர்த்த அரச மலேசிய போலீஸ் படை தயாராக உள்ளது.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் தேர்தல் நடைபெறாத மற்ற மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறையினர் தேர்தல்  நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற 15 வது பொதுத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட அதே எண்ணிக்கையிலான காவல்துறையினரே தற்போதைக்கு பயன்படுத்த படுவர் என்று அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்பான உத்தரவு தேர்தல் நடைபெறவுள்ள சிலாங்கூர், நெகிரி செம்பிலான, பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநில போலீஸ் தலைவர்களுக்கு அனுப்பப் படுள்ளதாக 15வது பொதுத் தேர்தலுக்கான பி.டி.ஆர்.எம்.மின் இயக்குநருமான அவர் சொன்னார்.

இங்குள்ள ஷாபாடு குறி சுடும் கிளப்பில் நேற்று நடைபெற்ற  2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் நிலை பொது சாம்பியன்ஷிப் குறி சுடும் போட்டிக்கு தலைமையேற்ற பின்னர் பெர்னாமாவிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :