ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் “கார்னிவல் கெர்ஜாயா“ திட்டத்தின் வழி 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு- கணபதிராவ்

கிள்ளான், மே 7- சிலாங்கூர் மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

சிலாங்கூர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் (யு.பி.பி.எஸ்.) வாயிலாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கார்னிவல் கெர்ஜாயா எனும் திட்டத்தின் மூலம் இந்த வெற்றி கிட்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த வேலைவாய்ப்புச் சந்தை மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுள்ளதாக கிள்ளான், டேவான் ஹம்சாவில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்புச் சந்தையில் நேர்முகப் பேட்டிகளில் கலந்து கொண்டவர்களில் 30 பேருக்கு வேலை கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

மைபியூச்சர்ஜோப்ஸ் மற்றும் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இங்கு நடைபெறும் இரண்டு நாள் வேலைவாய்ப்புச் சந்தையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையை மனிதவள அமைச்சர் வீ. சிவகுமார் தொடக்கி வைத்தார். சொக்சோ வாரியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால் சொச்சோ நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது ஆகியோர் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.


Pengarang :