ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலிவு விற்பனையை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு? ஆட்சிக்குழு அடுத்த வாரம் விவாதிக்கும்

அம்பாங் ஜெயா, மே 7- ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை திட்டத்தை வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பது தொடர்பாக மாநில ஆட்சி குழு கூட்டத்தில் அடுத்த வாரம் விவாதிக்கப்படும்.

இந்த அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனைக்கு மாற்றாக வேறு திட்டங்களை அமல்படுத்துவது குறித்து பரிந்துரைகளையும் தாங்கள் ஆராயவுள்ளதாக நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அவசியம் இருக்கும் பட்சத்தில் இந்த திட்டம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்படும். தற்காலிக அடிப்படையிலான திட்டமாக இந்த விற்பனை அமைந்தாலும் அதை நாங்கள் உடனடியாக நிறுத்த மாட்டோம் என அவர்  சொன்னார்.

இந்த திட்டத்தை வேறு வடிவில் அமல்படுத்துவதற்குரிய சாத்தியம் உள்ளது. வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு இதனை அமல்படுத்தலாம். மக்கள் பணத்தை மிச்சப்படுத்தக்கூடிய இதர திட்டங்கள் எங்களிடம் உள்ளன என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற பாண்டான் இண்டா தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புக்கு தலைமையேற்ற பின்னர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :