ECONOMYSUKANKINI

மலேசிய மாஸ்டர் பூப்பந்து போட்டி- அரையிறுதிச் சுற்றுக்கு எம். தீனா – பியர்லி தான் ஜோடி தேர்வு

கோலாலம்பூர், மே 27- மலேசிய மாஸ்டர் பூப்பந்து போட்டி புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான காலிறுதி சுற்றில் மலேசியாவின் எம்.  தீனா, பியர்லி தான் ஜோடி ஜப்பானின் சயாகா ஹிராதோ – யூகி புகாசிமாவை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீனா, பியர்லி தான் ஜோடி 13-21, 21-19, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பான் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து தீனா – பியர்லி தான் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்..


Pengarang :