ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் மேம்பாட்டுக் கொள்கை சிறார் கல்வி வளர்ச்சியை உறுதி செய்யும்

ஷா ஆலம், மே 29- சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிறார்
மேம்பாட்டுக் கொள்கை அத்தரப்பினரின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான
மாநில அரசின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என யாயசான்
அனாக் வாரிசான் சிலாங்கூர் (யாவாஸ்) அறவாரியம் நம்புகிறது.
தொலைநோக்கும் சிறப்பு, ஆக்கத்திறன்மிக்க இளம் தலைமுறையினரின்
உருவாக்கத்தைப் பொறுத்தே மாநிலத்தின் எதிர்கால தலைமைத்துவமும்
அதன் பொற்காலமும் அமையும் என்று அவ் வாரியத்தின் தலைவர் கான்
பெய் நீய் கூறினார்.
சமூகத்திற்கு குறிப்பாக சிறார்களுக்கு முழு ஆற்றலையும்
செலவிடுவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாடு மற்றும் வியூகத்தை
இந்த கொள்கை உருவாக்கம் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர்
தெரிவித்தார்.
இந்த கொள்கை நடப்புச் சூழலுக்கு ஏற்றதாக உள்ளது. இதன் மூலம்
சிறார்களுக்கான திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் சிறப்பான
முறையில் மேற்கொள்ள இயலும் என்பதோடு சிறார் மேம்பாட்டில்
தொடர்புடைய தரப்பினரின் திறனையும் மேம்படுத்த இயலும் என்றார்
அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற 2023 சிலாங்கூர் சிறார் விழா மற்றும் சிலாங்கூர்
சிறார் மேம்பாட்டுக் கொள்கை மற்றும் 2022-2025 நடவடிக்கை திட்டம்
ஆகியவற்றின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
இந்த நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி
வைத்தார்.


Pengarang :