ECONOMYMEDIA STATEMENT

பயிற்சியுடன் 10 தையல் இயந்திரம் இந்தியர்களுக்கு இலவசம்.

ஸ்ரீ கெம்பாங்கான். மே.11-  சிலாங்கூரில் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்வு கண்டு வருகிறது. குறைந்தது மாதம் ஒன்றுக்கு ரி.ம. 6,000.00 தேவைப்படுகிறது. இந்தியர்களும் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்திய பெண்கள் சொந்தமாக தையல் தொழிலில் ஈடு பட சிலாங்கூர் மாநில அரசு இலவச பயிற்சியையும் தையல் இயந்திரம் மற்றும் தையல் தொழிலுக்கு தேவையான தள வாட பொருட்களும் முற்றிலும் இலவசமாக  அவர்களுக்கு வழங்கி வருகிறது என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினரும் சித்தாம் பிரிவின் தலைவருமான புவான் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார்.
ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள சாய் ராணி தையல் நிலையத்தில் 10 இந்திய பெண்களுக்கு மாநில அரசின் முழு செலவில் தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 10 வாரம் நடைபெறும் இப்பயிற்சி, கடந்த 3 வாரங்களாக நடை பெற்று விட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கும் இலகுவாக எடுத்து செல்லக் கூடிய தையல் இயந்திரம் வழங்கப் பட்டன.
சித்தாம் தலைமையில் நடைபெறும் இப்பயிற்சியில் குறைந்தது 10 பேரும், அதிகபட்சமாக 20 பேரும் கலந்து கொள்ளலாம். 10 வித ஆடைகள் தைப்பது எப்படி என்பதை இப்பயிற்சியில் கற்றுக் கொடுக்கின்றனர்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் எதிர்காலத்தில் தையல் துறையில் சொந்த தொழிலில் ஈடு பட வேண்டும்.
மேலும் தொடர்ந்து தையல் துறையில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிலாங்கூர் மக்கள் தங்களது மாதாந்திர வருமானத்தை உயர்த்த வேண்டும் என்று தான் இப்பயிற்சி திட்டங்கள் இந்திய பெண்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப் படுகிறது.
இந்த தையல் பயிற்சி திட்டம் வசதி குறைந்த இந்தியர்களுக்கு வழங்கப் படுகிறது. சிலாங்கூரில் உள்ள அனைவரின் வருமானமும் உயர்வு காண வேண்டும். குடும்ப வருமானத்தை கணவரோடு இணைத்து உயர்த்த குடும்ப மாதர்கள் தயாராக வேண்டும்.
வெளிநாடுகளில் ஒரே நாளில் உடை தயாரிக்கும் வணிகம் வெற்றி கரமான நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்திய பெண்களும் எதிர் காலத்தில் சிறந்த தையல் தொழில் முனைவர்களாக திகழ வேண்டும் என்று 10 பெண்களுக்கும் தையல் இயந்திரத்தை எடுத்து வழங்கிய பின்னர் ஆற்றிய தலைமை   உரையில் புவான் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.

Pengarang :