ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இளைஞர் தலைவர்களுக்கு   தற்போதைய சவால்களை எதிர்கொண்டு,  குரல் கொடுக்க   மனத்திடன் வேண்டும்.

கோம்பாக், ஜூன் 11: இம்மாநிலத்தின் இளைஞரணி தலைவர்கள் தைரியமாக தங்கள் கருத்துக்களைக் கூறுவதுடன், அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தற்போதைய சூழ்நிலைகள் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு இளைஞர் குழுக்களை அணுகுவதில் உள்ள சவால்கள் குறித்தும் குழு அறிந்திருக்க வேண்டும் என்றார்.

“முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இளைஞர் குழுவிற்கும் இளைஞர்களுக்கும் இடையிலான தொடர்பை மிகவும் நட்பாக இருப்பதை உறுதிப்படுத்துவது (இன்றைய இளைஞர் தலைவர்கள்) சவாலாக உள்ளது.

“அதனால்தான் இளைஞர் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூற தைரியம் வேண்டும் மற்றும்  மனோபாவம் (இல்திசம் ) அல்லது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க வலுவான மன உறுதி கொண்டிருக்க வேண்டும் என்று நான்  கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் (IIUM) இன்று சிலாங்கூர் தேசிய இளைஞர் தின (HBN) 2023 கொண்டாட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :