ECONOMYSELANGOR

பி.கே.என்.எஸ்- வங்கிகள் ஒத்துழைப்பின் வழி அதிகமான இளையோர் வீடு வாங்குவதற்கு வாய்ப்பு

உலு சிலாங்கூர்  ஜூலை 18- சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்திற்கும் (பி.கே.என்.எஸ்)  வங்கிகளுக்கும் இடையிலான உடன்பாடு அதிகமான இளைஞர்கள் சொந்த வீடு பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளது .

இதன் தொடர்பில் பேங்க் இஸ்லாம் பேங்க் மூவாலமாட், அஃபின் பேங்க் மற்றும் பேங்க் சிம்பானான் நேஷனல் ஆகிய வங்கிகளுடன். இதுவரை  புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டுள்ளதாக பி.கே.என்.எஸ். சொத்துடைமை மேம்பாட்டுப் பிரிவின் துணை தலைமை செயல்முறை அதிகாரி கூறினார் .

இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தின் வாயிலாக வீடுகளின் விற்பனையை அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு பி.கே.என்.எஸ். நிறுவனத்திற்கு ஏற்படும். காரணம், வீடு வாங்குவோர் தங்களின் தேவை மற்றும் தகுதிக்கேற்ப வங்கிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்று முகமது கமருர்ஜமான் முகமது ரைஸ் தெரிவித்தார்.

வீட்டிற்கான கடன்களை பெறுவதில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வுகளை வழங்குகிறோம்.  மேலும் அதிகமான இளைஞர்கள் தங்களின் முதல் வீட்டை பெறுவதற்குரிய வாய்ப்பினையும் இதன் மூலம் ஏற்படுத்தித் தர முடியும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு உள்ள செரண்டா அந்தாரா காப்பியில் பி.கே.என்.எஸ். 2023  டிஸ்கவர் சொத்துடைமை விழாவை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

 முன்னதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் 2,375 சதுர அடி கொண்ட இரண்டு மாடி  வீடமைப்பு திட்டத்தை பி.கே.என்.எஸ். அறிமுகப் படுத்தியுள்ளதாக அவர் சொன்னார். இந்த வகை வீடுகள் 731,000 வெள்ளியில் விற்கப்படும் வேளையில் 2,796 சதுர அடி கொண்ட வீடுகள் 8 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளி விலையில் விற்கப்படுவதாக குறிப்பிட்டார்.


Pengarang :