ALAM SEKITAR & CUACAECONOMY

பரம ஏழ்மை நிலைக்கு இவ்வாண்டிற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

நீலாய் ஜூன் 24- இந்நாட்டில்  உள்ள பரம ஏழ்மை நிலைக்கு   இவ்வாண்டு இறுதிக்குள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அனைத்து அரசு இயந்திரங்களும் குறிப்பாக, கிராம மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள துறைகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாண்டிற்குள் பரம ஏழ்மை நிலை முற்றாக துடைத்தொழிக்க பட வேண்டும் என்று இன்று இங்கு “செந்தோஹான் காசே டேசா” எனும் நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் துணை பிரதமரும் கிராம மற்றும் வட்டார  மேம்பாட்டுத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, நெகிரி செம்பிலான் மந்திரி  புசார் ஸ்ரீ அமிருடன் ஹருண், தற்காப்பு அமைச்சர் முகமது ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிக எண்ணிக்கையில் உள்ள மலாய்காரர்கள் தவிர்த்து சீனர்கள், இந்தியர்கள், பூர்வ குடியினர், மற்றும் சபா, சரவா உட்புற பகுதியில் வசிக்கும் ஏழைகளின் வாழ்க்கையை  உயர்த்தும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சாகவும் கிராம  மற்றும் வட்டார மேம்பாட்டு துறை அமைச்சு விளக்குகிறது என்று அன்வார் சொன்னார்.

பெரிய மட்டும் பிரமாண்ட திட்டங்களில் மட்டும் அமைச்சு தனது முழு கவனத்தையும் செலுத்தாமல் ஏழைகளை  வறுமையில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாம் அதிவிரைவு ரயில் திட்டம், கிழக்குக்கரை ரயில் திட்டம், இரட்டைக் கோபுரம், புத்ரா ஜெயா போன்ற  பெருந்திட்டங்களை பற்றி மட்டும் விவாதிக்கவில்லை. மாறாக, பிள்ளைகளுக்கு பால் வாங்க முடியாத பள்ளி சீருடைகள் வாங்க முடியாத நிலையில்  இருக்கும் ஏழைகள் மீதும் நம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சொன்னார்.


Pengarang :