ALAM SEKITAR & CUACAECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை- தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் 25,000 குடும்பங்கள் பயனடைந்தன

கோல லங்காட், ஜூன் 24- தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றத் தொகுதியில் இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரை நடத்தப்பட்ட 30 அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை களில் அத்தொகுதியைச் சேர்ந்த சுமார் 25,000 குடும்பங்கள் பயன் பெற்றனர்.

இம்மாதம் மேலும் மூன்று மலிவு விற்பனைகள் இத்தொகுதியில் நடைபெறவுள்ளதாக தஞ்சோங் சிப்பாட் தொகுதி சேவை மையத்தின் சமூக நல அதிகாரி முகமது ரெஸா டோலா சஜாட் கூறினார்.

இத்தொகுதி மக்கள் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக வாரம் மூன்று முறையாவது இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்வதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள பத்து  லாவுட் கடற்கரையில் இன்று நடைபெற்ற சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான ஏசான் ரஹ்மா ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனையின்  போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விற்பனையில் வரிசை எண்களைப் பெறுவதற்காக  பொது மக்கள் காலை 8.00 மணி முதல் வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு வந்தவர்களில் பலர் ஏற்கனவே மலிவு விற்பனை யில் கலந்து கொண்ட அனுபவம் உள்ளவர்கள். ஆகவே, மலிவு விற்பனை காலை 10.00 மணிக்கு தொடங்கிய போதிலும் முன்கூட்டியே வரிசையில் காத்திருக்க தொடங்கினர் என்றார் அவர்.


Pengarang :