ECONOMYMEDIA STATEMENT

லாரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மாசு அபாயத்தைத் தடுக்கும் முயற்சி

ஷா ஆலம், ஜூன் 27: நேற்று காலை வடக்கே செல்லும் எலிட் நெடுஞ்சாலை கிலோமீட்டர் 35 இல் லாரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மாசு அபாயத்தைத் தடுப்பதில் அதிகாரிகளின் ஆரம்ப நடவடிக்கை வெற்றி பெற்றது.

இச்சம்பவத்தால் லாரியின் டேங்க் கசிவு ஏற்பட்டு, டீசல் கழிவுகள் அருகில் உள்ள வாய்க்காலில் கலந்தது. இச்சம்பவம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (எல்ஆர்ஏ) செயல்பாட்டை பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு  உறுப்பினர் கூறினார்.

“அருகிலுள்ள வடிகால் பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கழிவு மாசுபாட்டின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வடிகால்கள், கழிவு நீர்த்தேக்கங்கள் மற்றும் சாலைகள் வறண்டு துர்நாற்றம் வீசவில்லை” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அக்கழிவு சம்பவ இடத்திலிருந்து 1.19 கிமீ தொலைவில் உள்ள புக்கிட் தம்போய் எல்ஆர்ஏ மற்றும் லபோஹான் டகாங் எல்ஆர்ஏ (11 கிமீ) ஆகியவற்றின் செயல்பாட்டை சீர் குலைக்கும் சாத்தியம் உள்ளது என்று அவர் விளக்கினார்.

கடுமையான நடவடிக்கை எடுக்கவும், நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்களை லுவாஸ்க்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களை ஹி லோய் சியான் கேட்டு கொண்டார்.


Pengarang :