ACTIVITIES AND ADSECONOMY

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு மலிவு விற்பனை நடை பெறாது 

ஷா ஆலம், ஜூன் 27– சிலாங்கூர் மாநில அரசின் அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனை திட்டம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடை பெறாது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அந்த மலிவு விற்பனை  வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதி மறுபடியும்

தொடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடன் ஷாரி கூறினார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனை தினசரி மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு  கோழி 10.00  வெள்ளிக்கும், பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் பத்து வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், ஐந்து கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும்  விற்பனை செய்யப்படுகிறது .

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான இந்த ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை திட்டம் உள்நாட்டு வணிக  அமைச்சின்  ஒத்துழைப்புடன் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி ஏசான் ரஹ்மா எனும் பெயரில் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :