ALAM SEKITAR & CUACAPBT

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க பொதுமக்களுடன் இணைந்து எம்.பி.எஸ்.ஜே. துப்புரவு இயக்கம்

ஷா ஆலம், ஜூன் 29- ஏடிஸ் கொசு பரவலைத் தடுப்பதற்காக  குடியிருப்பாளர் பிரதிநிதித்துவ மன்றத்தின் ஒத்துழைப்புடன் துப்புரவு இயக்கத்தை இங்குள்ள வீடமைப்பு பகுதிகளில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொண்டது.

இம்மாதம் 25ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த துப்புரவு இயக்கம் 12,4,24 மற்றும் 2ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியிருந்ததாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

டிங்கி காய்ச்சலுக்கு மூல காரணமாக விளங்கும் ஏடிஸ் கொசு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.

டிங்கி பரவல் அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் எனப்படும் இடங்களை அடையாளம் கண்டு ஏடிஸ் கொசுக்களை அழிப்பதன் மூலம் டிங்கியிலிருந்து விடுபட்ட பகுதிகளை உருவாக்குவதையும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும், பூச்சோங் பெர்டானா தேசிய பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்வின் மூலம் டிங்கி  பரவலின் அபாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையையும் மாநகர் மேற்கொண்டது.


Pengarang :