PBTSUKANKINI

கபடியை சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்ற பெருமை விளையாட்டாளர்களை  சேரும்

கோலசிலாங்கூர் ஜூலை 3 ; கோலசிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர்கள், எம்.ஐ.வாய்.சி.  என்ற இளைஞர் அமைப்பு மற்றும் கோலசிலாங்கூர்  சமூக நல  உருமாற்றம் என்ற (Persatuan kebajikan transformasi kuala selangor) குழுவினர்  கூட்டு  ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பெஸ்தாரி ஜெயா பொது திடலில் இளையோருக்கான  கபடி போட்டி விறுவிறுப்பாகவும், சிறப்பாகவும், நடைபெற்றது.
காலை 8:00 -தொடங்கி மாலை 5:00 – மணி வரையில் நடை பெற்ற இக்கபடி போட்டியில் சுமார் 14 – குழுக்கள் கலந்து கொண்டன, புத்ரா ஜெயா , பூச்சோங் ,பந்திங் ,மற்றும் பல இடங்களில் இப்போட்டிக்கு வருகை தந்திருந்தனர்.
இதில் முதல் அங்கமாக இப் போட்டிக்கு வருகை அளித்து இந்த கபடி போட்டியை தொடங்கி வைத்து  கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹஜி சூல்கிப்லி அமாட்.  உறையாற்றினார். அவர்  சிரமம் பாராமல் இந்த கபடி போட்டியில் ஆர்வமாய் கலந்து கொள்ள வந்திருக்கும்  இளைஞர்களுக்கு  தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதோடு இந்த வருடம் சுக்மா போட்டியில் கபடி விளையாட்டை தேர்வு செய்து அந்த விளையாட்டையும் சீ விளையாட்டு  அளவுக்கு  எடுத்துச் செல்ல முயற்சிக்கும்  நம்நாட்டு  விளையாட்டுத் துறைகளின்  முயற்சியை பாராட்டினார்.  ஆக  கபடிக்கு   உயிரோட்டம்  கொடுத்தும்  , அவ் விளையாட்டை  தேசிய  அளவிலும், சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் பெறுமை  இளம் விளையாட்டாளர்களான   உங்களைச் சேரும் என பாராட்டினார்.
இந்த விளையாட்டு நிகழ்வுக்கு  சிறப்பு வருகையாளராக  வந்த  கோலசிலாங்கூர் பி.கே.ஆர்.தலைவர்  திரு :தீபன் சுப்ரமணியம்  பேசுகையில் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி இன்று பல போராட்டத்திற்கு பிறகு சுக்மா போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளதை கண்டு பெருமை  கொள்வதாக  கூறினார்.. காரணம் நமது பாரம்பரிய விளையாட்டு சுக்மா போட்டியில் இடம்  பெற்றது நமக்கும் நம் இனத்திற்கு பெருமை என்றார்.
இவ் விளையாட்டு பற்றி தற்பொழுது (டிக்  டோக் )  கிலும் பரவலாகப் பகிரப்பட்டு  பேசு பொருளாகி  வருகிறது  என்றார்.  மற்ற நாடுகளிலும் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.   இந்த கபடி விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் விளையாடக்கூடிய விளையாட்டாக இருப்பதால்  கபடி எல்லா  இடங்களிலும்  இவ் விளையாட்டை நடத்த  வேண்டும்.
இறுதியாக இந்த கபடிப் விளையாட்டு போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற  பூச்சோங் (Brothers) விளையாட்டாளர்களுக்குத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு காலையில் இருந்து மாலை வரையில் பல உதவிகள் புரிந்த கோலசிலாங்கூர் நகராண்மை கழக  மாவட்ட மன்ற உறுப்பினர்களுக்கும்,மற்ற இயக்கத்தில் உள்ளவர்களுக்கும் தனது நன்றியினை கூறி விடைபெற்றார்.

Pengarang :