ECONOMYMEDIA STATEMENT

தேர்தலுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை- பத்தாண்டுகளுக்கு முன்னரே இலவச பஸ் சேவையைத் தொடக்கி விட்டோம்- அமிருடின்

ஷா ஆலம், ஜூலை 8- மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பருவகால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, தொடர்ச்சியாகவும் எல்லாக் காலங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. சிலாங்கூர் அரசு பத்தாண்டுகளுக்கு முன்னரே இலவச பஸ் சேவையைத் தொடக்கி வைத்து விட்டது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 6 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக கிளந்தான் மாநிலத்தைப் பின்பற்றி இலவச பஸ் சேவையை ஏற்பாடு செய்யும்படி பாஸ் கட்சி நம்மை கேட்டுக் கொண்டுள்ளது. 

பாஸ் கட்சிக்கும் பெரிக்கத்தான் கூட்டணிக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நாம் இது போன்ற சேவையை வழங்க ஐந்து ஆண்டுகள் காத்திருக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளாக இலவச பஸ் சேவையை நாம் வழங்கி வருகிறோம். இந்த திட்டத்திற்காக நான்கரை கோடி வெள்ளியை செலவிட்டுள்ள வேளையில் சுமார் ஆறு கோடி பேர் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள  பண்டார் பாரு பாங்கியில் சிலாங்கூர் மாநில தேர்தல் இயந்திரத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டது முதல் இதுரை மாநிலத்திலுள்ள ஆறு கோடி பேர் பயனடைந்துள்ளனர். 

வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பில் கலந்து கொள்ள மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு இலவச பஸ் சேவையை ஏற்பாடு செய்து தரும்படி தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் ஆறு மாநில அரசுகளையும் பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளதாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது.


Pengarang :