ECONOMYMEDIA STATEMENT

ஃபெல்டா குடியேறியவரின் கடனைத் தீர்ப்பதில் பிரதமர் ஜூன் மாதமே கையெழுத்திட்டார், முகைதீன் எதை தீர்த்தார்?

அலோ ஸ்டார், ஜூலை 9:  ஃபெல்டா குடியேற்றவாசிகளின் கடன்களை தீர்ப்பது குறித்து பொய் கூறியதாக முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகைதின் யாசினின் அறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மறுத்தார்.
நிதியமைச்சர் என்ற முறையில் கடந்த மாத இறுதியில் தான் கடனை அகற்றுவதற்கான ஒப்புதலில் கை யெழுத்திட்டதாக அன்வார் கூறினார்.
“இன்று முன்னாள் பிரதமர்   டான் ஸ்ரீ  முகைதின் யாசின்  2021 ஆம் ஆண்டிலிருந்து இந்த விவகாரம் (கடன்) தீர்க்கப் பட்டதால் பிரதமர் பொய் சொன்னார் என்று அறிக்கை விட்டுள்ளார்.
“இப்போது அது முடிந்துவிட்டது என்று சொல்கிறீர்கள், நான் ஜூன் இறுதியில் கையெழுத்திட்டேன்,அதாவது நிதி அமைச்சராக இந்த ஒப்புதலின் கையெழுத்திட்டேன். நீங்கள் 2021 ஐ முடித்து விட்டீர்கள், என்ன முடித்தீர்கள்? எப்படி  முடித்தீர்கள்? எங்கே முடித்தீர்கள்?”   என்று பிரதமர்  இன்று, யுனிவர்சிட்டி உத்தரா மலேசியாவில் (UUM) அன்வாரை சந்தியுங்கள் நிகழ்ச்சியில்  கேள்வி எழுப்பினார்.
பிரதமர் அன்வார் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடனை அகற்றுவதற்கு கடந்த அரசாங்கம் வாக்குறுதி  அளித்து இருந்ததாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
“பெரிக்காத்தான்  நேசனலின் கீழ் 2021 மற்றும் பெரிக்காத்தான் நேசனலின் கீழ் 2022 பட்ஜெட்டில் ஃபெல்டாவின் கடனைத் தீர்த்து வைப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை  என்ற என் பதிலில் நான்  உறுதியாக நிற்கிறேன்.
 2023 ஆம் ஆண்டு  பட்ஜெட்டில் மட்டுமே, ஃபெல்டா வின் மொத்தக் கடனைத் தீர்க்க RM990 மில்லியனை ஆரம்ப ஒதுக்கீட்டில் வழங்கத் தொடங்கினேன், இது மொத்தம் RM8.3 பில்லியன்” என்று அவர் கூறினார்.

Pengarang :